search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 நாட்களில் பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர்  திறப்பு
    X

    கோப்புபடம்.

    3 நாட்களில் பவானிசாகர் அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

    • 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கும் பொருட்டு 12.8.2022 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.
    • கால்வாயில் மைல் 6.4-055-ன் இடதுகரையில் 2 அடி விட்டம் அளவில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது.

    காங்கயம் :

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2022-23-ம் ஆண்டின் முதல் போக நஞ்சை பாசனத்திற்கு, 1,03,500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 12.8.2022 முதல் 9.12.2022 வரை 120 நாட்களுக்கு தண்ணீ ர் வழங்கும் பொருட்டு 12.8.2022 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    இந்நிலையில் 30.10.2022 காலை 11 மணியளவில் கீழ்பவானித்திட்ட பிரதான கால்வாயில் மைல் 6.4-055-ன் இடதுகரையில் 2 அடி விட்டம் அளவில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாதவாறு தடுக்கும் வண்ணம் உடனே பவானிசாகர் அணையிலிருந்து வழங்கப்பட்டிருந்த 2300 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த தண்ணீர் மைல் 6.4-055 குறைவதற்கு முன்பே இந்த பள்ளத்தின் அளவு 6 அடி பள்ளமாக பெரிதாகியது, அதனால் அப்பகுதிகளின் கரைகளில் எவ்வித உடைப்பும் ஏற்படவில்லை . இதனால், விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகளின் உடைமைகளுக்கும் எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை .

    தற்பொழுது தண்ணீர் பிரதான கால்வாயின் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் இந்த பழுதை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சேதமடைந்த தலை மதகு சுவர் மற்றும் பேரல்ஆகியவை உடனடியாக சீரமைக்கப்பட்டு3 நாட்களில் பவானிசாகர் அணையிலிருந்து பிரதான தண்ணீர் மீண்டும் திறக்கப்படும். மேலும், தற்பொழுது அனைத்து பாசனப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால், பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்படுவதால், விசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கீழ்பவானி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×