என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
சேலத்தில் தண்டவாள பராமரிப்பு பணி - 3-ந்தேதி திருப்பூர் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து
- சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
- கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
திருப்பூர்:
சேலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 3-ந் தேதிகளில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. மேலும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கோவை செல்லும் உதய எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
கே.எஸ்.ஆர். பெங்களுரு-எர்ணாகுளம் எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களுரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.