என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூர் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம்
- 34-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
- 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 1,341 இடங்களில் நடந்தது. மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த முகாமில் 20 ஆயிரத்து 306 பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியை விட பூஸ்டர் செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றனர்.
Next Story






