என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூர் பொங்கல் விழா - பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடத்த திட்டம்
- கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.
- .விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., -எம்.பி.,க்கள், மேயர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி ,நொய்யல் பண்பாட்டு அமைப்பு, ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில் திருப்பூர் பொங்கல் விழா - தமிழர் திருநாள் 2023 நடக்கிறது. வருகிற 15ந் தேதி துவங்கி 17-ந்தேதி வரை 3 நாட்களுக்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் விழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் நடந்தது. நொய்யல் பண்பாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு ஆலோசனை வழங்கி விழா ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.
வருகிற 15-ந் தேதி மாலை 4 மணிக்கு சமத்துவ பொங்கல், வள்ளி கும்மியாட்டம், ஈசன் பெருஞ்சலங்கை ஆட்டம், பெண்கள் தப்பாட்டம், களரி -சிலம்பாட்டம், திருவண்ணாமலை பெரியமேளம், பண்ணிசை கலைஞர்களின் பாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மறுநாள் (16ந் தேதி) மாலை 5 மணி முதல் கரகம், காவடி, கட்டைக்கால் ஆட்டம், தேவராட்டம், டொல்லு குனிதா கலை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 3-வது நாள் ஜீவநதி நொய்யல் அமைப்பு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., -எம்.பி.,க்கள், மேயர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.






