என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் மயில்.
பல்லடம் பகுதியில் மயில்களுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
- பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில், விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
- மயில்கள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
பல்லடம் :
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை மயில்களைக் காண்பது அரிதான ஒன்றாக இருந்து வந்தது. வனங்களில் காணப்படும் மயில்கள்,சில கோவில்களில் வளர்ப்பு பிராணிகள் போல அங்கொன்றும் இங்கொன்றுமாக சுற்றி வரும்.ஆனால் அதற்கு பின்னர் கிராமப் புறங்களில் புதராக இருக்கும் இடங்களில் மயில்களைக் காண முடிந்தது. தொடர்ந்து மயில்களின் பெருக்கம் அதிகரித்து தற்போது காக்கை,குருவிகளுக்கு நிகராக கிராமங்கள் தோறும் பல நூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றித் திரிகின்றன.இதற்கிடையே பல்லடம் சுற்று வட்டார பகுதிகளில், விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.இந்த நிலையில், கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் மயில்கள் விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.சாகுபடி செய்த பயிர்கள் முளைக்கும் தருவாயில் அதனை கொத்தி சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
மயில் தேசிய பறவை என்பதால் அதனை யாரும் தொந்தரவு செய்வது கிடையாது.விவசாய தோட்டங்களில் சுற்றி வந்த மயில்கள் வீடுகளை நோக்கியும் படையெடுக்க தொடங்கியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த மயில்களுக்கு சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.