search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கலூர் ஊராட்சி  கோவை மாவட்டத்துடன்  இணைக்கப்படுமா? -  பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்.

    பொங்கலூர் ஊராட்சி கோவை மாவட்டத்துடன் இணைக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • அன்னூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் பொங்கலூர் உள்ளது.
    • பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.

    திருப்பூர் :

    கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து கடந்த 2009 பிப்ரவரி மாதம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

    அப்போது அவிநாசி தாலுகாவில் இருந்த அன்னூர் ஒன்றியம் கோவை மாவட்டத்திலும், அவிநாசி ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டன. புதிய மாவட்டம் பிரித்தபோது அன்னூரை ஒட்டி உள்ள பொங்கலூர் ஊராட்சி மக்கள் தங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்கும்படி கோரிக்கை வைத்தனர். இருந்தும் இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

    இதனால் 12 ஆண்டுகளாக கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக அந்த ஊராட்சி மக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து பொங்கலூர் ஊராட்சி மக்கள் கூறியதாவது:- கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அன்னூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் பொங்கலூர் உள்ளது. பொங்கலூர் ஊராட்சியில், தாசராபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், மொண்டிபாளையம், திம்மநாயக்கன்புதுார், பாப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்பட 9 ஊர்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.

    கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் உள்ளது. பொங்கலூரை அடுத்துள்ள ஆம்போதி ஊராட்சியும், பொங்கலூருக்கு முன்னதாக உள்ள பசூர் ஊராட்சியும் கோவை மாவட்டத்தில் உள்ளன. ஆனால் நடுவில் உள்ள பொங்கலூர் ஊராட்சி மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

    இப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லவும், தாலுகா அலுவலகம் செல்லவும், மூன்று பஸ்கள் மாறி அவிநாசி செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றாலும் 3 பஸ்கள் மாறி தான் செல்ல வேண்டும். அதேநேரம் கோவை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டால் மிக அருகிலேயே ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை அன்னூரில் உள்ளன. உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் கோவை மாவட்டத்தில் உள்ள பசூர் மற்றும் அன்னூரில் உள்ளன.

    எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க கோரி பொங்கலூர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை, திருப்பூர் கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பி, 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது சிரமத்தை போக்க அரசு பொங்கலுார் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×