search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி
    X

    திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் கலர் பென்சில், வர்ண பலூன்கள் வழங்கப்பட்ட காட்சி. 

    பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி

    • திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் மருந்தக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பள்ளி ஆசிரியைகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1ந் தேதி முதல் 7ந் தேதி வரை ஜன் ஒளஷதி திவாஸ் (மக்கள் மருந்தக வார கொண்டாட்டம்) இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு 7 நாட்களில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உறுதிமொழி பாதயாத்திரை (பேரணி), குழந்தைகளுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான மருத்துவ முகாம் முதலானவை நடைபெறும். திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் மருந்தக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    4-ம் நாளான இன்று கோவில் வழி ஸ்ரீகாயத்ரி நர்சரி - பிரைமரி பள்ளியில் "ஜன் ஒளஷதி குழந்தைகளுக்கான நண்பன்" எனும் தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது. பள்ளியின் தலைமையாசிரியை நாகஜோதி தலைமை வகித்தார். திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் உரிமையாளர் அருண் பாரத் , மத்திய பார்வையாளர் அரவிந்த்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டியில் சாதனா முதலிடத்தையும், தாரணி இரண்டாமிடமும், மணிகண்டன் மூன்றாமிடமும் பெற்றனர். இவர்களுக்கு போஷான் (சத்து மாவு) பரிசாக வழங்கப்பட்டது. திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் கலர் பென்சில், பழச்சாறு, பிஸ்கட், வர்ண பலூன்கள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியைகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×