என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
சர்க்கார் கண்ணாடிபுத்தூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு
- அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் ,மின்சாரம் ,மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.12. 78 கோடி மதிப்பீட்டில் 156 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. படுக்கையறை, சமையலறை, வரவேற்பறை, குளியலறை, கழிவறை ஆகிய வசதியுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய், சாலை, குடிநீர் ,மின்சாரம் ,மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்து காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சர்க்கார் கண்ணாடிப்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் ,திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல. பத்மநாபன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் முபாரக் அலி ,ஒன்றிய குழு தலைவர் காவியா ,பேரூராட்சி தலைவர் கலைவாணி ,துணைத் தலைவர் ரங்கநாதன் ,மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சாகுல் ஹமீது, மேற்கு ஒன்றிய செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் ,பேரூர் செயலாளர்கள் பாலமுருகன், சாதிக் அலி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.






