search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
    X

    தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றபோது எடுத்த படம்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு

    • இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
    • வீடுகளில் விதவிதமான உணவுகள் தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கினர். கேக் உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர்.

    திருப்பூர்:

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.திருப்பூர் குமரன் சாலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கேத்தரின் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    இதேப்போல் திருப்பூர் குமார் நகர் சி.எஸ்.ஐ., ஆலயம், ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் உள்ள சூசையப்பர் ஆலயம், கோர்ட்டு அருகில் உள்ள டி.இ.எல்.சி.ஆலயம், அவிநாசி புனித தோமையார், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம், பல்லடம் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சி.எஸ்.ஐ., புனித ஜான் ஆலயம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனால் அந்த ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டன.

    உடுமலை நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சிஎஸ்ஐ. இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. காங்கயம் நகரம் கரூா் சாலையில் உள்ள குறைகள் தீா்க்கும் குழந்தை மாதா அருள்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல காங்கயம் களிமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயம், வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இன்று காலையும் ஆலயங்களில் வழிபாடு நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் வீடுகளில் விதவிதமான உணவுகள் தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கினர். கேக் உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகள் களை கட்டி காணப்பட்டன. வீடுகள், ஆலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.

    Next Story
    ×