search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகர்  பகுதிகளில் தார்ச்சாலை பணிகளை மேயர் ஆய்வு
    X

    தார்ச்சாலை பணிகளை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்த காட்சி. 

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் தார்ச்சாலை பணிகளை மேயர் ஆய்வு

    • திருப்பூர் மாநகராட்சி 46 மற்றும் 49 வது வார்டு தார்ச்சாலைஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ணை மேயர் பாலசுப்ரமணியம் சார்பில் குப்பை கொட்டும் ட்ரம்கள் மற்றும் செடிகளை சுத்தம் செய்யும் கருவி ஆகியவற்றை வழங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் பழுதான சாலைகளை சீரமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி 46 மற்றும் 49 வது வார்டு பகுதிகளான மணியக்காரம்பாளையம்,ராக்கியாபாளையம் ரோடு, பாரதிநகரில் தார்ச்சாலைஅமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த சாலைப்பணிகளை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது சாலைகளின் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்துபொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

    அதேபோல் வாவிபாளையம் தமிழ்நாடு வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் துணை மேயர் பாலசுப்ரமணியம் சார்பில் குப்பை கொட்டும் ட்ரம்கள் மற்றும் செடிகளை சுத்தம் செய்யும் கருவி ஆகியவற்றை வழங்கினர்.மேலும் அப்பகுதியில் அமைத்துள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் வடிகால் மற்றும் அடிப்படை தேவைகளை ஆய்வு மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர்.

    Next Story
    ×