என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
அக்டோபர் 4 ஆம் தேதி வேளாண் பல்கலைக்கழக கவுன்சிலிங் விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
- இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 5000 ரூபாய் 4ந் தேதி அன்றே நேரடியாகவோ அல்லது 7ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும்.
திருப்பூர்,அக். 2-
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இணையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு, இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்கள் 4-ந்தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன், விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு கட்டணமாக 200 ரூபாய், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 100 ரூபாய் செலுத்த வேண்டும். இதில், பங்கேற்க அனைத்து கல்வித்தகுதி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் சேர்க்கை கட்டணமாக 5000 ரூபாய் 4ந் தேதி அன்றே நேரடியாகவோ அல்லது 7ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட அவகாசத்திற்குள் கட்டணம் செலுத்தவோ, சான்றிதழ் சமர்ப்பிக்கவோ தவறினால் சேர்க்கை ரத்தாகி விடும்.
மேலும் விபரங்களுக்கு 94886 35077/94864 25076 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






