என் மலர்
உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டக் காட்சி.
வெள்ளகோவிலில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
- வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
- இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் ரோட்டரி சங்க பட்டய தலைவர் எஸ்.ரகுநாதன் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில், வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் சார்பில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளகோவில் ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆர் வெங்கடசுப்பு தலைமையில், செயலாளர் அருண்குமார் முன்னிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி மற்றும் ரோட்டரி சங்க பட்டய தலைவர் எஸ்.ரகுநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






