என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி
- தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது
- அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மற்றும் மாவட்ட ஊரக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் இணைந்து தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செளமியா ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். மாணவ செயலர்கள் சுந்தரம், காமராஜ், ராஜபிரபு, செர்லின், தினேஷ்கண்ணன், மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 120க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட அலகு- 2 மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் இருந்து மரக்கடை பேருந்து நிறுத்தம் வரை ஊட்டச்சத்தை எடுக்க வலியுறுத்தியும், இயற்கை உணவை உட்கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், துரிதஉணவு மரண பாதைக்கு வழி வகுக்கும் என்று கோஷமிட்டும், காய்கறிகளை மாலையாக அணிந்து வேடமிட்டும், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் பேரணியில் சென்றனர். பேரணியில் மேற்பார்வையாளர் காந்திமதி, அங்கன்வாடி பணியாளர் ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.






