search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களை    பணிமாற்றம் செய்ய வேண்டும் - சி.ஐ.டி.யூ., வலியுறுத்தல்
    X

    கோப்புபடம். 

    3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் கூட்டுறவு சங்க ஊழியர்களை பணிமாற்றம் செய்ய வேண்டும் - சி.ஐ.டி.யூ., வலியுறுத்தல்

    • ரேஷன் பொருள்கள் அனைத்தும், கிழிந்த சாக்குப் பைகளில் எடை குறைவாக நூல் மாற்றம் செய்யாமல் வழங்கப்படுகின்றன.
    • ஒரே இடத்தில் நீண்ட காலமாக செயல்பட்டதால் இவா்கள் ஊழலுக்கு உறுதுணையாக செயல்படும் நிலை உள்ளது.

    திருப்பூர்:

    கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் நகா்வுப் பணியில் உள்ள ஊழியா்களில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட கூட்டுறவுப் பணியாளா் சங்கம் (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து சிஐடியூ. கூட்டுறவுப் பணியாளா் சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கௌதமன், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டம் முழுவதும் நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகள் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்கள் அனைத்தும், கிழிந்த சாக்குப் பைகளில் எடை குறைவாக நூல் மாற்றம் செய்யாமல் வழங்கப்படுகின்றன. இது சம்பந்தமாக புகாா் தெரிவித்தும், ரேஷன் பொருள்கள் உரிய அளவு முறையாக வழங்குவதில்லை. எனவே இது குறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் நகா்வுப் பணியில் உள்ள ஊழியா்கள் 3 வருடங்களுக்கு மேலாக பணியாற்றுவோரை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஒரே இடத்தில் நீண்ட காலமாக செயல்பட்டதால் இவா்கள் ஊழலுக்கு உறுதுணையாக செயல்படும் நிலை உள்ளது. ஆகவே, காலதாமதம் செய்யாமல் இவா்களைப் பணி மாற்றம் செய்ய வேண்டும்.

    திருப்பூா் மாநகராட்சி உள்ளிட்ட நியாய விலைக் கடைகளுக்கு வழங்கக்கூடிய மண்ணெண்ணெய் 100 லிட்டா் குறைவாக ஒதுக்கீடு செய்து, அதில் 5 லிட்டா் வரை குறைவாக வழங்கப்படுகிறது. கோதுமை மாத இறுதியில் வழங்காமல் முதல் வாரத்திலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

    Next Story
    ×