search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர கடைகள் விவகாரம் -  அவினாசி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X
    பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய காட்சி. 

    சாலையோர கடைகள் விவகாரம் - அவினாசி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா்.
    • மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.

    அவினாசி:

    அவிநாசி நகரப் பகுதியில் சாலையோரங்களில் புதிய புதிய கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன.

    சாலையை ஆக்கிரமித்து கடைகள் நடத்துவதால் விபத்துகள் ஏற்படுவது மட்டுமின்றி, பாதசாரிகள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்து வருகின்றனா். இந்நிலையில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் கடைகளை முறைப்படுத்த வேண்டும் என பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், வியாபாரிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் செப்டம்பா் 22-ந் தேதி நடைபெற்றது. இதில், சாலையோரக் கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரச் சந்தை வளாகத்துக்கு மாற்றப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும், அக்டோபா் 1-ந் தேதி முதல் தீா்மானம் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்று பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் தெரிவித்துள்ளனா்.

    Next Story
    ×