search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிவன்மலையில் தங்கத்தேர் புறப்பாடு -  10 நாட்களுக்கு நிறுத்தம்
    X

    கோப்புபடம். 

    சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிவன்மலையில் தங்கத்தேர் புறப்பாடு - 10 நாட்களுக்கு நிறுத்தம்

    • இக்கோவிலில் கடவுள் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி இருக்கிறார்
    • அந்த பெட்டிக்குள் எந்த பொருள் வைக்க வேண்டும் என பக்தர்கள் கனவில் வந்து முருகப் பெருமானே கட்டளையிடுவதாக கூறுகின்றனர்.

    காங்கயம்:

    காங்கயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிறப்பு முருகப் பெருமான் அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலின் தனிச்சிறப்பாக உத்தரவு பெட்டி என்று ஒன்று உள்ளது. அந்த பெட்டிக்குள் எந்த பொருள் வைக்க வேண்டும் என பக்தர்கள் கனவில் வந்து முருகப் பெருமானே கட்டளையிடுவதாக கூறுகின்றனர்.

    அந்த பொருள் சமுதாயத்தில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இக்கோவிலில் கடவுள் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக எழுந்தருளி இருக்கிறார். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் இறுதியில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களுக்கு கோவிலின் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும்.

    அதே போல் இந்த வருடமும் வரும் 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 10 நாட்களுக்கு தங்கத்தேரானது நிறுத்தப்படும் என இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன்மலை முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×