search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தி சாமளாபுரத்தில் விழிப்புணர்வு பேரணி
    X
    விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.

    நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்தி சாமளாபுரத்தில் விழிப்புணர்வு பேரணி

    • பள்ளபாளையம் குளக்கரையில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது .
    • சாரண-சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மங்கலம்:

    சாமளாபுரம் பேரூராட்சியில் நகரங்களுக்கான தூய்மையான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம் என்பதை வலியுறுத்தி சைக்கிள் பேரணி ,விழிப்புணர்வு ஊர்வலம், மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சைக்கிள் பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பரமசிவம்பாளையம் வரை சென்று பின்னர் மீண்டும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    இந்த சைக்கிள் பேரணிக்கு சாமளாபுரம் லிட்ரசி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அதனைத்தொடர்ந்து "என் குப்பை எனது பொறுப்பு " என்ற தலைப்பில் நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது . இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவ,மாணவிகள் "நீர் நிலைகளை சுத்தமாக வைத்திருப்போம்" என்ற வாசகத்தை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.இந்த விழிப்புணர்வு ஊர்வலமானது சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் துவங்கி பள்ளபாளையம் குளம் அருகே நிறைவடைந்தது.

    பின்னர் பள்ளபாளையம் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. பள்ளபாளையம் குளக்கரையில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது .இந்த சைக்கிள் பேரணி,விழிப்புணர்வு ஊர்வலத்தில் சாமளாபுரம் லிட்ரசி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியின் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள்,சாரண-சாரணிய மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற செயல்அலுவலர் ஆனந்தகுமார், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான வேலுச்சாமி, தயாளன் வினோஜ்குமார், பட்டீஸ்வரன், நித்யா ஆரோக்கியமேரி, மைதிலி, மேனகா, கிருஷ்ணவேணி, பூங்கொடி, மகாலட்சுமி, கனகசபாபதி, பிரியா, பெரியசாமி, துளசிமணி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×