என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  செங்கப்பள்ளி-அலகுமலை பகுதியில் நாளை மின்தடை
  X

  கோப்புபடம். 

  செங்கப்பள்ளி-அலகுமலை பகுதியில் நாளை மின்தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செரங்காடு,ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
  • கருணைப்பாளையம் பிரிவு, செங்கோடாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

  திருப்பூர்:

  திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  செங்கப்பள்ளி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 8 மணிமுதல் பகல் 12 மணி வரை செங்கப்பள்ளி, விருமாண்டாம்பாளையம், காடபாளையம், பள்ளப்பாளையம்,பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூர், வட்டாலப்பதி, செரங்காடு,ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

  திருப்பூர் அலகுமலை துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) கண்டியன் கோவில் உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைபடும். இதனால் கண்டியன்கோவில், பூசாரிப்பாளையம், நவவாய்க்கால்மேடு, முதியாநெரிசல், வேலாங்காட்டுப்பாளையம், கருணைப்பாளையம் பிரிவு, செங்கோடாம்பாளையம் பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×