என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
காங்கயத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
- நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார்
- கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார்.
காங்கயம்:
காங்கயம், உடையார் காலணி, பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அருகில் வசிப்பவர் மல்லிகார்ஜூனன். இவர் காங்கயத்தில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் டிரைவராக வேலை செயது வருகிறார். இவரது மனைவி சித்ரா(வயது 25). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. நேற்று காலை மல்லிகார்ஜூனன் வேலைக்கு சென்ற நிலையில் சித்ரா தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். மதியம் 2மணிக்கு மல்லிகார்ஜூனன் வீட்டிற்கு வந்தபோது வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் தூக்குப்போட்ட நிலையில் சித்ரா பிணமாக கிடந்தார். இது பற்றி காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 வருடமே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.
Next Story






