என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அழிக்கப்படும் விளைநிலங்கள்- இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா ?
  X

  கோப்புபடம். 

  அழிக்கப்படும் விளைநிலங்கள்- இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுவார்களா ?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.
  • குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன் விவசாயத்தை பற்றி சொல்லிக்கொடுப்பதில்லை.

  திருப்பூர்:

  திருப்பூர் மாவட்டத்தில் 1.92 லட்சம் எக்டரில் சாகுபடி பரப்பு உள்ளது. இவற்றில் பிரதானமாக தென்னை, கரும்பு, நெல், பல்வேறு வகையான காய்கறி வகைகள், பயிறு வகைகள் விவசாயிகளால் பயிரிடப்பட்டு வருகின்றன.ஆனால்விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள கிராமங்களில் பருவமழை பொய்த்து விடுவதால் விளைநிலங்கள் தரிசாக உள்ளன.

  இதனை நம்பி இனி பயனில்லை என்று விவசாயிகளும், விளைநிலங்களை விற்று விடுகின்றனர்.குறிப்பாக ரோட்டை ஒட்டிய விளைநிலங்களில், தொழிற்சாலைகள், வணிகக்கடைகள், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பயன்பாட்டிற்கு விற்கப்படுகிறது.சிலர் விவசாயத்தை கைவிட்டு கோழிப்பண்ணை மற்றும் தென்னை நார் தொழிற்சாலைகளில் ஈடுபடுகின்றனர். எனவே கிராமப்புற இளைஞர்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபடும் வகையில் ஊக்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இது குறித்து தன்னார்வலர்கள் கூறியதாவது:-

  தண்ணீர் பற்றாக்குறை, உர விலை உயர்வு, பருவ மழை பொய்த்தல், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை போன்ற பல காரணங்களால் சிலர் விவசாயத்தை கைவிடுகின்றனர்.அதிலும் பலர் தங்களது குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைப்பதுடன் விவசாயத்தை பற்றி சொல்லிக்கொடுப்பதில்லை.இதன் காரணமாக ஆண்டுதோறும் பல 100 ஏக்கரில் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. விவசாய காரணங்களைத்தவிர, வேறு காரணங்களுக்காக விவசாய நிலத்தை விற்பனை செய்ய அனுமதிக்கக்கூடாது.விவசாயத்துக்கு தேவையான இடுபொருள், உரம், தண்ணீர், மின்சாரம் மிக குறைந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஏழை விவசாயிகளுக்கு எளிய வகையில் கடன் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

  Next Story
  ×