search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  பா.ம.க.வினர் கடிதம்
    X

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க.வினர் கடிதம்

    • அலங்கியம் ,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 5000 கடிதங்கள் முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
    • மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி,ஒன்றிய தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற கோரி அலங்கியம் தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2,000 கடிதங்களை பா.ம.க. அலங்கியம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில்மாவட்ட செயலாளர் அ. ரவிச்சந்திரன் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அலங்கியம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணி,ஒன்றிய துணைச் செயலாளர் ரங்கநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கவிதா உள்ளிட்ட50க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஊர்வலமாக வந்து அலங்கியம் தபால் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியில் கடிதங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில்,அலங்கியம் ,தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 5000 கடிதங்கள் முதல்வரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்துஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ெரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கு ஒரு நிமிடம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    இதில் தாராபுரம் நகரச்செயலாளர் பிரவீன்,நகர இளைஞர் அணி குருநாதன், இளைஞர் அணி பொறுப்பாளர் பொன்ராஜ், தாராபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் பொதிகை ரங்கநாதன், நகரத் தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் அமராவதி,ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பானுமதி மற்றும் சாரதாமணி,ராஜாமணி,மாநில செயற்குழு உறுப்பினர் கந்தசாமி,ஒன்றிய தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×