search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னவீரம்பட்டி பகுதியில் காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு
    X

    கோப்புபடம். 

    சின்னவீரம்பட்டி பகுதியில் காய்கறி கழிவுகளால் சுகாதார சீர்கேடு

    • தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார்.
    • குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    உடுமலை:

    உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி ஊராட்சி உள்ளது. இந்தப் பகுதிக்கு உட்பட்ட சேகர் புரம்,குமார் நகர்,சித் தாண்டீஸ்வரர் லே-அவுட், பெதப்பம்பட்டி ரோடு,ஏரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தனிநபர் ஒருவர் காய்கறி கழிவுகளை கொட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் புகார் அனுப்பி உள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது:- குமார் நகர் பகுதியில் வசிக்கும் தனிநபர் ஒருவர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வருகின்ற கால்நடைகளுக்கு உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராஜேந்திர சாலையில் உள்ள தினசரி காய்கறி சந்தையில் இருந்து காய்கறி கழிவுகளை எடுத்து வந்து உணவாக அளித்து வருகிறார். அதில் இருந்து எழும் துர்நாற்றம் சுற்றுப்புற வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள் குழந்தைகளுக்கு உடல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட நபரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சின்ன வீரம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே சின்ன வீரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குமார் நகர் பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் நபர்மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×