search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பில் மகப்பேறு மருத்துவ  பிரிவுகட்டுமானப்பணி -  ஆ.ராசா எம்.பி., ஆய்வு
    X

    மகப்பேறு மருத்துவ பிரிவு கட்டுமான பணியை ஆ. ராசா எம்.பி. ஆய்வு செய்த காட்சி. 

    அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பில் மகப்பேறு மருத்துவ பிரிவுகட்டுமானப்பணி - ஆ.ராசா எம்.பி., ஆய்வு

    • ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணியை ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.
    • திராவிடன் வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், பொதுப்பணித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    அவினாசி:

    அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகப்பேறு மருத்துவப் பிரிவு கட்டுமானப் பணியை நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.மகப்பேறு மருத்துவப் பிரிவில் தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களும், 16 அறைகளில் 64 படுக்கைகளும் அமைக்கப்பட உள்ளன.ரூ.5.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் இப்பணியை ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது அங்கு வந்த சோலை நகா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதி மக்கள், அப்பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தினா்.தற்காலிக நடவடிக்கையாக நாள்தோறும் வெளியாகும் கழிவுநீா் லாரிகள் முலம் வெளியேற்றப்படும் என்று ஆ.ராசா உறுதியளித்தாா்.

    ஆய்வின்போது பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, பொறுப்பாளா்கள் சரவணன்நம்பி, திராவிடன் வசந்த், சிவபிரகாஷ், பால்ராஜ், பொதுப் பணித் துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×