என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சுக்கம்பாளையத்தில்வீட்டுமனை மோசடி- போலீசில் புகார்
  X

  புகார் தெரிவித்த பொதுமக்கள்.

  சுக்கம்பாளையத்தில்வீட்டுமனை மோசடி- போலீசில் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டுமனை விற்பனைக்காக விளம்பரங்கள் செய்தோம். இதனை நம்பி பொதுமக்கள் பலர் எங்களிடம் முன்பணம் செலுத்தினர்.
  • கிரையம் செய்து கொடுக்க முடியாமலும், அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமலும் தவித்து வருகிறோம்.

  பல்லடம்:

  பல்லடம் அருகே சுக்கம்பாளையம் பகுதியில் உள்ள அருள்ஜோதி நகரில் வீட்டுமனைகள் போடப்பட்டும்,வீடுகள் கட்டியும்,விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இலவந்தி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் ஒரே வீட்டுமனை இடத்தைக் காட்டி இருவரிடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பல்லடம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.இந்த நிலையில் இடத்திற்கு அட்வான்ஸ் பெற்று விட்டு கிரயம் செய்யாமல் ஏமாற்றி வருவதாக ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் தனியார் ஹவுசிங் டெவலப்பர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த், மகேந்திரன் ஆகியோர் கூறியதாவது:-

  மங்கலம் பகுதியை சேர்ந்த 4 நபர்களிடம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் பகுதியில் உள்ள நிலத்தை வீட்டுமனைகள் அமைக்க அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்து இருந்தோம்.இந்த நிலையில் டி.டி.சி.பி அப்ரூவல் பெற்றவுடன் கிரயம் செய்து கொள்ளலாம் என்றும் அது வரை வீட்டுமனை வியாபாரத்தை நடத்தலாம் என்றும், டி.டி.சி.பி அப்ரூவல் வந்தவுடன் கிரயம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்கள்.

  இதனை நம்பிய நாங்கள் சுமார் ரூ.50 லட்சம் வரை செலவு செய்து வீட்டுமனை அமைப்பதற்காக, நிலத்தை சுத்தம் செய்து,ரோடு மற்றும் பல்வேறு வேலைகளை செய்தோம். வீட்டுமனை விற்பனைக்காக விளம்பரங்கள் செய்தோம். இதனை நம்பி பொதுமக்கள் பலர் எங்களிடம் முன்பணம் செலுத்தினர். இந்த நிலையில், டிடிசிபி .அப்ரூவல் வந்தவுடன் ஒப்பந்தம் போட்ட அதே இடத்துக்கு எங்களிடம் ஒப்பந்தம் போட்டவர்கள், அவர்களது உறவினர்களான வேறு நபர்களுக்கு கடந்த 6.1.2023 அன்று கிரயம் கொடுத்து பணம் பெற்றுக் கொண்டு எங்களை ஏமாற்றியது தெரிய வந்தது .இதனால் முன் பணம் கொடுத்தவர்களுக்கு வீட்டுமனை இடத்தை கிரையம் செய்து கொடுக்க முடியாமலும், அவர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமலும் தவித்து வருகிறோம். இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளோம். எனவே ஒரே இடத்தை காட்டி இரண்டு பேரிடம் வியாபாரம் செய்த நபர்கள் மீது பல்லடம் வருவாய்த்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  Next Story
  ×