search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் 2 டன் முருங்கைக்காய் வரத்து
    X

    முருங்கைக்காய். 

    வெள்ளகோவிலில் 2 டன் முருங்கைக்காய் வரத்து

    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • மரம் முருங்கை ரூ.20முதல் 25 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.65முதல் 70வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    மடத்துக்குளம்,அக்.31-

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம்-இந்திராணி தம்பதியரின் மகள் பட்டீஸ்வரி (வயது 19). சற்று காது கேட்கும் திறனை இழந்த மாற்றுத்திறனாளியான இவர் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிப்பை முடித்து, மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினார். இதில் 720க்கு 117 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    மாற்றுத்திறனாளி மாணவி

    மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வாகி உள்ளார். ஆனால் படிப்பதற்கு போதிய பண வசதி இல்லாததால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். பட்டீஸ்வரியின் தந்தை கூலி வேலையும், தாய் தூய்மை பணியாளராகவும் பணியாற்றி வரும் நிலையில் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை நடத்துவதற்கே போதுமானதாக இல்லை. இதனால் அரசு தனக்கு மருத்துவ படிப்பு படிக்க தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பட்டீஸ்வரி மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    மருத்துவம் படிக்க வேண்டும் என்பது எனக்கு சிறு வயது முதலே விருப்பம். இதனால் சிறுவயதில் இருந்தே நன்றாக படித்து வந்தேன். 10-ம்வகுப்பு தேர்வில் 410 மதிப்பெண்ணும், பிளஸ்-2 தேர்வில் 512 மதிப்பெண்ணும் பெற்றேன். மருத்துவம் படிப்பதற்காக நீட் தேர்வு எழுதினேன்.கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் 104 மதிப்பெண்கள் பெற்றேன். இதனால் எனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. 2-வது முறையாக 2022ம் ஆண்டு நீட் தேர்வு எழுதினேன். இதில் 117 மதிப்பெண்கள் பெற்றேன். இதன் மூலம் எனக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆனால் போதிய பண வசதியில்லாததால் மருத்துவம் படிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

    ஆசிரியர்கள் உதவி

    எனது தந்தை தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார். தாய் தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார். அண்ணன் காளீஸ்வரன் காட்டுவேலைக்கு சென்று வருகிறார். இதன் மூலம் எங்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கிறது. எனது தாய்க்கு அடிக்கடி உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்க செலவு ஆகிறது. இதனால் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தும் என்னால் படிக்க முடியாத நிலை உள்ளது.

    மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு கூட எங்களது குடும்பத்திடம் பணம் கிடையாது. நான் படித்த மடத்துக்குளம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் வசூலித்து தந்தார்கள். மருத்துவம் படிக்க புத்தகம், தங்குவதற்கான விடுதி கட்டணம் என நிறைய செலவாகும். அந்த அளவுக்கு எங்களால் பணத்தை புரட்ட முடியவில்ைல. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.

    தாய்க்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால் நான்தான் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. முதலில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாததால் ஒரு வருடம் வீட்டில் இருந்தவாறே அடுத்த நீட் தேர்வுக்கு தயாரானேன். மாநில பாட புத்தகங்களை வைத்தே படித்தேன். யூ-டியூப் மூலம் ஆசிரியர்கள் கற்றுகொடுத்தவற்றையும் பார்த்து தேர்வுக்கு தயாரானேன். தாய்க்கு உடல் நிலை பாதிப்பால் வீட்டில் உள்ள ஆடு-மாடுகளை நான்தான் மேய்த்து விட்டு வருகிறேன். அதனை பராமரிக்கவும் செய்கிறேன். சமையல் வேலைகளையும் செய்கிறேன். தம்பி யுவபாரதி(10) 5-ம்வகுப்பு படிக்கிறான். அவனையும் கவனிக்க வேண்டியது உள்ளது.

    வீட்டுவேலைகள்

    வீட்டு வேலைகளையும் பார்த்து விட்டு நீட் தேர்வுக்கு தயார் ஆனேன்.தினமும் அதிகாலை 4மணிக்கு எழுந்து படிப்பேன். இரவு வீட்டு வேலைகள் முடிந்ததும் 8-30மணி முதல் 11-30 மணி வரை படிப்பேன்.

    எனக்கு காது லேசாக கேட்காது. இதனால் என்னை சிலர் ஏளனமாக கூட பேசுவார்கள். அதையெல்லாம் மனதில் வைக்காமல் தேர்வுக்கு தயாரானேன். தற்போதைய செலவுக்காக வீட்டில் உள்ள ஆடு, மாடுகள் சிலவற்றை விற்று விட்டோம். மீதி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்து வருகிறேன். தற்போது பலர் உதவி செய்து வருகிறார்கள். மடத்துக்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் , வேடப்பட்டி பள்ளி ஆசிரியர்கள் , வேடப்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் நிதி அளித்துள்ளார்கள். இருப்பினும் அரசு எனது மருத்துவ படிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×