search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் மலைவாழ் மக்கள்
    X

    தொட்டில் கட்டி நோயாளியை தூக்கிச்செல்லும் மலைவாழ் மக்கள். 

    உடுமலை அருகே சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை தொட்டில் கட்டி தூக்கி செல்லும் மலைவாழ் மக்கள்

    • மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.
    • குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவ ருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 18க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் அமைந்து ள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உதவிகளை பெற உடுமலை நகர் பகுதிக்குத்தான் வர வேண்டும்.

    தொட்டிலில் தூக்கி செல்லும் அவலம்

    இந்தநிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த மலைகிராமங்களில் வசிக்கும் மலைவாழ்மக்கள் கர்ப்பிணிப்பெண்கள், பாம்பு கடித்தவர்கள், உடல்நிலை சரியில்லாத வர்களை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி அழைத்து செல்லும் அவல நிலை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

    இந்நிலையில் குருமலை மலைவாழ்கிராமத்தில் வசித்துவந்த முருகன் என்பவ ருக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை தொட்டில் கட்டி தூக்கி கொண்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    சாலை அமைக்க கோரிக்கை

    மாற்றுவழியில் உடுமலை மருத்துவமனைக்கு வர 110 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டியே நோயாளிகளை தூக்கி செல்கின்றனர். திருமூர்த்திமலை முதல் குருமலை வரை 6 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தால் 110 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியது இல்லை. அரை மணி நேரம் முதல் 1மணி நேரத்தில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று விடலாம். எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி உடனடியாக சாலை அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×