search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூரில் குப்பைகளை அகற்றாததால் மாசடையும் நீர்
    X

    மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் மாசடைந்துள்ள குடிநீரை படத்தில் காணலாம்.

    முத்தூரில் குப்பைகளை அகற்றாததால் மாசடையும் நீர்

    • வணிக வளாகம் இருக்கும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு இருக்கிறது.
    • முத்தூர் பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர் பஸ் நிலையம் அருகில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் இருக்கும் பகுதியில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளின் நீர் மாசடைந்து கலர் மாறி இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் கிணற்று நீரை கொண்டு குடிநீர் தேவையை பூர்த்திச் செய்து கொள்ளும் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி கொட்டப்பட்டுள்ள குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சில மாதங்களாக மலை போல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×