என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வாகன நிறுத்தங்களில் மலைபோல் குவிந்து கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள்
    X

    திருப்பூர் ரெயில் நிலைய வாகன நிறுத்தத்தில் குவிந்து கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள்.

    திருப்பூர் வாகன நிறுத்தங்களில் மலைபோல் குவிந்து கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு இடங்களில் அதனை நிறுத்தி செல்வார்கள்.
    • தீபாவளி பண்டிகை என்பதால், பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் வேலை செய்து வருகிறவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், பலரும் தங்களது பயன்பாட்டிற்காக தங்களது வாகனங்களை கொண்டு வருவது வழக்கம். இதன் பின்னர் திருப்பூரில் அந்த வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். முக்கியமான பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் போது ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு இடங்களில் அதனை நிறுத்தி செல்வார்கள்.

    இந்நிலையில் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை என்பதால், பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.

    இதன் காரணமாக வாகன நிறுத்தங்களில் இருசக்கர வாகனங்கள் மலைபோல் குவிந்துள்ளன. பண்டிகை முடிவடைந்த நிலையில் ஒரு சில நாட்களுக்கு பின்னர் தான் பலரும் திருப்பூருக்கு திரும்புவார்கள். அதன் பின்னர் தான் வாகன நிறுத்தங்களில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் குறையும்.

    Next Story
    ×