search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மக்களுக்கு ரூ .64¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள்   வழங்கினர்
    X

    நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் பொதுமக்களுக்கு  வழங்கிய போது எடுத்த படம்.

    கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மக்களுக்கு ரூ .64¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் வழங்கினர்

    • நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    தாராபுரம் :

    தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டி நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா கொண்டரசம்பாளையம் காடேஸ்வரர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை தாங்கினார். விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ.64 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கடனுதவி, வீட்டுமனைப்பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் வழங்கினர். விழாவில் அமைச்சர் மு.ெப.சாமிநாதன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றி வருகிறார்கள். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் வசதி தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்து கழகக்கட்டுப்பட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை வழங்கல் புதுமைப்பெண் என்கிற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் கயல்விழி பேசும்போது " இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து வீட்டுமனைப் பட்டா வழங்குதல் போன்ற பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் பட்டாவை பெற்ற நபர்கள் அங்கே வீடு கட்டி குடியேறிய பட்சத்தில் அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    விழாவில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் புஷ்பா தேவி. தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் எஸ்.வி. செந்தில்குமார், தாராபுரம் நகர்மன்ற தலைவர் கு.பாப்பு கண்ணன், தாசில்தார் கோவிந்தசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×