search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் பகுதியில் புதிய ரேசன் கடைகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேஷன் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கிய காட்சி.

    வெள்ளகோவில் பகுதியில் புதிய ரேசன் கடைகள் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்

    • 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி, சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.

    மேலும் வெள்ளகோவில் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.20.33 கோடி கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல்சேர் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3,18,000 மதிப்பீட்டில் பேட்டரி வீல்சேர்களையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,21,941 மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கு கைபேசிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×