என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடத்தில் மருத்துவ முகாம் - நாளை நடக்கிறது
- சிறப்பு மருத்துவ முகாம் பல்லடத்தில் நாளை 29-ந்தேதி நடைபெறவுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
திருப்பூர் :
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் பல்லடத்தில் நாளை 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.பல்லடம் உழவா் சந்தை அருகேயுள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி (மேற்கு) கட்டடத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைக்கவுள்ளாா்.இதில், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்ள உள்ளனா்.
இம்முகாமில், பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை செய்து பயன்பெறலாம் என்று பல்லடம் நகராட்சி சுகாதார அலுவலா் செந்தில்குமாா், பல்லடம் வட்டார மருத்துவ அலுவலா் சுடா்விழி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
Next Story






