என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நவீன சலவையகங்கள் அமைக்க கடன் உதவி
  X
  கோப்புபடம்.

  நவீன சலவையகங்கள் அமைக்க கடன் உதவி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 10 பேர் கொண்ட குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.
  • பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

  திருப்பூர்

  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 பேர் கொண்ட குழுவாக அமைத்து, நவீன முறை சலவையகங்களை ஏற்படுத்த கடன் உதவி செய்யப்படுகிறது. சலவை தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் பணி மூலதனம் ஆகியவற்றுடன் அதிகபட்சமாக நிறுவனம் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 நிறுவனங்கள் ஏற்படுத்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

  அதன்படி குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தவராக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.

  இந்த திட்டம் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தகுதியுடையவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×