search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான தமிழ்மொழி கற்போம் திட்டம்
    X

    அன்பில்மகேஷ் பொய்யாமொழி.

    புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான 'தமிழ்மொழி கற்போம்' திட்டம்

    • 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா்.
    • புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ள

    திருப்பூர்:

    புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூரில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கிவைக்கிறாா்.

    பின்னலாடை நகரமான திருப்பூரில் பிகாா், ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ராஜஸ்தான் உள்ளிட்ட 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் தொழிலாளா்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.

    இந்த நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூா் ஆத்துப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கி வைக்கிறாா்.

    இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா். தொடக்க விழாவில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×