என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போலீஸ் எனக்கூறி இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் - வாலிபரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு
- 21 வயதான பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பல்லடம் :
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ரோபாஸ்டன் (வயது 21). இவர் அந்த பகுதியை சேர்ந்த 21 வயதான பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலர்கள் இருவரும் ஊட்டிக்குச் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மதுரை ,ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல்லடம் அருகே செல்லும்போது திடீரென அவர்களது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்தார். திடீரென அவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்து இருவரும் எங்கு செல்கிறீர்கள். உங்களைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது. உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியு ள்ளார். நாங்கள் ஊட்டி செல்கிறோம், இருவரும் காதலர்கள் என்று அவர்கள் கூறிய போது உங்களை தனித்தனியே விசாரிக்க வேண்டும் என்று கூறிய அந்த வாலிபர், ரோபாஸ்டனை மோட்டார் சைக்கிளில் சுமார்1 கிலோமீட்டர் தூரம் வரை அழைத்து சென்று பல்லடம் - திருச்சி சாலையில் உள்ள மாதப்பூர் கருப்பசாமி கோவில் அருகே நிற்க வைத்துவிட்டு, காதலியிடம் விசாரணை நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இந்தநிலையில் அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த ரோபாஸ்டன் உடனே காதலி இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காதலியை காணவி ல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காதலி கடத்தப்பட்டது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சோத னை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து போலீ சார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சி களையும் பார்வையி ட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு பல்லடதிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.பின்னர் அந்தப் பெண் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இளம்பெண்ணை போலீஸ் எனக் கூறி, கடத்திய வாலிபரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது. தனிப்படை போலீசார் , இளம்பெண்ணை கடத்திய வாலிபர் யார், எதற்காக கடத்தி சென்றார் என்று தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்