என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
காமராஜர் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி நடத்த உத்தரவு
- போட்டிகளை நடத்தி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
திருப்பூர்:
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காமராஜரின் பணிகள் தொடர்பான பேச்சு, ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டி மாணவ, மாணவிகளுக்கு நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பள்ளிக்கல்வி துறை இயக்குனரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளை போன்று வட்டார, மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.கல்வி அலுவலகங்களிலும், காமராஜ் போட்டோ வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் வருகிற 15ந் தேதி அரசு பள்ளிகள் செயல்படும். அன்று வேலை நாள். இவ்வாறு அவர் கூறினார்.






