என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
வழக்குப்பதிவு செய்த 25 நாட்களுக்குள் இருசக்கர வாகனம் திருடிய வாலிபருக்கு சிறை தண்டனை

- விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜே.எம்.கோர்ட்டு-2 மாஜிஸ்திரேட்டு பழனிகுமார் உத்தரவிட்டார்.
- இளங்கோ மொபட்டை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டதாக தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் காங்கயம் ரோடு டூம்லைட் மைதானம் அருகே உள்ள டிமாண்ட் வீதியை சேர்ந்தவர் இளங்கோ (வயது 56). இவர் கடந்த மே மாதம் 25-ந் தேதி காலை தனது வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த மொபட்டை மர்ம ஆசாமி திருடிச்சென்று விட்டதாக தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு மாணிக்கம்பாளையம் வில்லரசன்பட்டியை சேர்ந்த பூபாலன் என்கிற விஜய் (26) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து மொபட்டை பறிமுதல் செய்தனர். வழக்கில் புலன் விசாரைணையை முடித்து இறுதி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 25 நாட்களுக்குள் விசாரணை முடிந்து விஜய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஜே.எம்.கோர்ட்டு-2 மாஜிஸ்திரேட்டு பழனிகுமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய தெற்கு போலீஸ் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், காவலர்கள் நாகராஜ் குட்டி, குருசாமி, அனித்ராஜ், மணிவண்ணன் ஆகியோருக்கு வெகுமதி அளித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பாராட்டினார்.