search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் பின்னலாடை நிறுவனங்களை இயக்குவது கடினம் - ஏ.இ.பி.சி., செயற்குழு உறுப்பினர் சொல்கிறார்
    X

    கோப்புபடம்.

    வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் பின்னலாடை நிறுவனங்களை இயக்குவது கடினம் - ஏ.இ.பி.சி., செயற்குழு உறுப்பினர் சொல்கிறார்

    • புதிதாக 10 ஆயிரம் பேர் வந்தால் கூட வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல் உள்ளது.
    • வட மாநில தொழிலாளர்கள் விரைவாக தங்களுக்குரிய வேலையை கற்று கொள்கின்றனர்.

    திருப்பூர் :

    கொரோனா தொற்று, ஊரடங்கு என சவாலான காலகட்டத்திலும் கூட திருப்பூர் தொழில் துறையினர், தொழில் வளர்ச்சி சார்ந்த விஷயங்களில் விடாமல் சாதித்து வருவது வியப்புக்குரிய விஷயம் தான்.கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகளை வசப்படுத்த, வட மாநில தொழிலாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது தான் தற்போதைய யதார்த்த நிலை.

    ஆரம்ப காலங்களில் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாநிலங்களில் இருந்து மட்டுமே வட மாநில தொழிலாளர்கள் வந்த நிலையில் சமீபநாட்களாக நேபாளம், சட்டீஸ்கர், அசாம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வட மாநில தொழிலாளர்கள் வரத்துவங்கியுள்ளனர்.

    பின்னலாடை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.திருப்பூரில் நடந்த தேசிய ஆயத்த ஆடை கண்காட்சி ஏற்பாடு குறித்து தகவல் பரிமாற்றத்தின் போது இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், ''ஒரு நாளில், புதிதாக 10 ஆயிரம் பேர் வந்தால் கூட வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய சூழல், திருப்பூரில் உள்ளது என்றார்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏ.இ.பி.சி.,) செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியம் கூறுகையில், பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் விரைவாக தங்களுக்குரிய வேலையை கற்று கொள்கின்றனர்.தங்கள் வேலையை பாதியில் விட்டு செல்லாமல், அதில் தங்களை நிலைப்படுத்தி கொள்கின்றனர். வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் பின்னலாடை நிறுவனங்களை இயக்குவது கடினம் என்றார்.

    Next Story
    ×