search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜனவரி 29-ந் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு
    X

    ஆேலாசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

    ஜனவரி 29-ந் தேதி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு

    • அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் தோட்டத்தில் நடைபெற்றது.
    • டிசம்பர் 18-ந் தேதி கால்கோள் விழாவை சிறப்பாக நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஜல்லிக்கட்டு தலைவர் தோட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவாசலம், சங்கத்தின் செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் டிசம்பர் 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கால்கோள் விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், அந்த கால்கோள் விழாவிற்கு தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரை அழைப்பது என்றும் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களையும் அழைப்பது, தைப்பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டியை அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பாக நடத்துவது என்றும் ஒருமனதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு விழாவிற்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினை அழைப்பது, மேலும் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பது என்றும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது. கால் கோள் விழாவன்று காளைகளுக்கான முன்பதிவு தொடங்குவது என்றும், முதலில் உள்ளூர், மாவட்ட காளைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    Next Story
    ×