என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள்.
வெள்ளகோவிலில் தொழிற்சங்கத்தினர் பிரச்சார இயக்கம்
- பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும்.
- வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க. விசைத்தறி தொழிற்சங்க தலைவர் வி.வி.தம்பிதுரை தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் திருவேங்கடம், திமுக., சுமைதூக்கும் சங்க செயலாளர் முருகேஷ் முன்னிலையில், மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க கோரியும், வேளாண் விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றக்கோரியும் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர். இதில் 50 பேர் கலந்து கொண்டனர். முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Next Story






