search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
    X

    ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்த காட்சி.

    திருப்பூரில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

    • வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
    • ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பகுதியில், ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வட மாநிலத்தவர்களின் கொண்டாட்டங்களில், ஹோலி பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. பின்னலாடை நகரான திருப்பூரில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பிகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி, திருப்பூரில் உள்ள பணியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

    இதற்கிடையே ஹோலி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் ரயில் மூலம் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள், தங்களது குடும்பத்தினரோடு இன்று முதலே ஹோலி பண்டிகையை, உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    திருப்பூர் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள், நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து, ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களை கரைத்து, தெளித்து கொண்டாடினர்.

    இதே போல் நாளையும் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×