என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
  X

  பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பூர் மாவட்ட செயலாளருமான எஸ்.கர்ணன் தலைமை தாங்கினார்.
  • முத்துராமலிங்க தேவரின் உருவ சிலையை அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  அனுப்பர்பாளையம் :

  அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்ட மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவரும், திருப்பூர் மாவட்ட செயலாளருமான எஸ்.கர்ணன் தலைமை தாங்கினார்.

  மாவட்ட தலைவர் ரமேஷ், மாநகர செயலாளர் காளீஸ்வரன், மாநில குழு உறுப்பினர் மகேஷ்குமார், பல்லடம் ஒன்றிய பொதுச்செயலாளர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்து கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக மாவட்ட செயலாளர் கர்ணன் ஆலோசனைகளை வழங்கி பேசினார்.

  கூட்டத்தில் திருப்பூரில் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெறும் மாவட்ட மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது, மாவட்ட மாநாட்டையொட்டி இருசக்கர வாகன பேரணி நடத்துவது, மதுரையில் அடுத்த மாதம் 12,13,14 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் மாநில மாநாட்டிலும், திருப்பூர் மாவட்ட மாநாட்டிலும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது, திருப்பூரில் முத்துராமலிங்க தேவரின் உருவ சிலையை அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  இதில் மாவட்ட தொழிற்சங்க முன்னாள் பொதுச்செயலாளர் பாண்டி, இளைஞரணி செயலாளர் மொக்க மாயன், மாவட்ட பொறுப்பாளர் கருப்பசாமி, துணைத் தலைவர் ரவி, மாநகர துணைச் செயலாளர் சங்கர், இளைஞரணி துணை செயலாளர் முத்தையா, சின்னத்தம்பி, இளைஞரணி துணை செயலாளர்கள் பூபேஸ், பாஸ்கர், பால்பாண்டி, தகவல் தொழில்நுட்பபிரிவு காளீஸ்வரன், வடக்கு பகுதி செயலாளர் பிரகாஷ், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் சரவணன், விக்கி, கோபி, ஆனந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×