search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் 2 நாட்கள் நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம் 2 நாட்கள் நடக்கிறது

    • கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்று உடனடியாக கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 14, 15-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த மாணவ, மாணவிகள் கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க சிறப்பு கல்விக் கடன் முகாம் வருகிற 14, 15-ந் தேதிகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் கடன் அனுமதிக் கடிதம் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அதன் பின்னா் முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும் விண்ணப்பத்தின் நகல், மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் இரு புதிய புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், ஆண்டு வருமானச் சான்று, ஜாதிச் சான்று, பான் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களையும், கல்விக் கட்டண விவரம், 10-ம்வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ்கள், இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

    இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் பங்கேற்று உடனடியாக கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலுவலகத்தை 0421-2971185 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×