என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
பல்லடத்தில் நாளை விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம்
- பல்லடம் தாலுகா அலுவலகத்தில், நாளை காலை, 11 மணிக்கு விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது.
- வட்டார அளவிலான கூட்டம் என்பதால், விவசாயிகள் அதற்கேற்ப திட்டமிட்டு பங்கேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பல்லடத்தில், நாளை நடக்கவுள்ள விவசாயி கள் குறைகேட்கும் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு வருவாய் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்கும் நாள் கூட்டம், பல்லடம் தாலுகா அலுவலகத்தில், நாளை (21ம் தேதி) காலை, 11 மணிக்கு நடைபெறுகிறது.
சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடக்கவுள்ள இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு வருவாய் துறை அறிவித்துள்ளது. மேலும், இது வட்டார அளவிலான கூட்டம் என்பதால், விவசாயிகள் அதற்கேற்ப திட்டமிட்டு பங்கேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story






