என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நாற்றுப்பண்ணையில் பழவகை மரக்கன்றுகளை அதிகம் வாங்கும் விவசாயிகள்
    X

    கோப்புபடம்.

    உடுமலை நாற்றுப்பண்ணையில் பழவகை மரக்கன்றுகளை அதிகம் வாங்கும் விவசாயிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு ஒன்றியத்திலும் மரக்கன்று வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.

    உடுமலை :

    உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் மரக்கன்று வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.வட்டார அளவில் நாற்றுப்பண்ணை அமைத்து ஊராட்சிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.உடுமலை போடிபட்டி நாற்றுப்பண்ணையில் பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.மகளிர் குழு, தோட்டக்கலைத்துறை மற்றும் வேலை உறுதி திட்டத்தின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கன்றுகள் வினியோகிக்கப்படுகின்றன.

    கோடை துவங்கியுள்ளதையொட்டி ஊராட்சிகளில் எடுத்துச்செல்லும் மரக்கன்றுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.வழக்கமான நாட்களில் ஒரு ஊராட்சிக்கு குறைந்த பட்சமாக ஒரு மாதத்தில் 500க்கும் அதிகமான மரக்கன்றுகள் பெறப்படுகிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களில் மொத்தமாக 6 ஆயிரம் கன்றுகள் மட்டுமே வினியோகிக்கப்பட்டுள்ளன.கோடை துவங்கியுள்ளதால் மரக்கன்றுகளை நடுவதற்கும் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    இது குறித்து நாற்றுப்பண்ணை பராமரிப்பாளர்கள் கூறியதாவது:- சில கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கும். இதனால் ஜூன், ஜூலை துவங்கியதும் மரக்கன்றுகள் அதிக அளவில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படும்.இப்போது விவசாயிகள் பெற்றுச்சென்ற மரக்கன்றுகளில் 90 சதவீதம் பழவகை கன்றுகள்தான். கொய்யா, மாதுளை, பலா உள்ளிட்ட மரக்கன்றுகள் கடந்த இரண்டு மாதங்களில் அதிகமாக பெற்றுச்சென்றுள்ளனர் என்றனர்.

    Next Story
    ×