search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணியாளர்கள் திறன் அறிந்து பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் -  ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    பணியாளர்கள் திறன் அறிந்து பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் - ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

    • தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் திருப்பூர் - அவிநாசி ரோட்டில் நடந்தது.
    • பல்வேறு காரணங்களால் பணியாளர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள், கருத்து மோதல்கள் உருவாகிவிடுகின்றன.

    திருப்பூர் :

    தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனத்தின் முதல் கருத்தரங்கம் திருப்பூர் - அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்.கே., ரெசிடென்ஸியில் நடந்தது.இதில், என்.ஐ.பி.எம்., திருப்பூர் கிளை தலைவர் மோகன் பேசியதாவது:-

    ஆடை உற்பத்தி நிறுவனங்களில், அமைதியான பணிச்சூழல் நிலவுவது மிகவும் அவசியம். பல்வேறு காரணங்களால் பணியாளர்களுக்கு இடையே கருத்து முரண்பாடுகள், கருத்து மோதல்கள் உருவாகிவிடுகின்றன.இதனால் வீண் குழப்பங்கள், பிரச்சினைகள் உருவாகின்றன. ஆடை உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. உரிமையாளர்களுக்கும் கடை நிலை தொழிலாளர்களுக்கும் இடையே பொது மேலாளர், உதவி மேலாளர், மனிதவளம், உற்பத்தி மேலாளர், உற்பத்தி மேற்பார்வையாளர், நிறுவன உரிமையாளர் என பல்வேறுவகை இரண்டாம் கட்ட பணியாளர் உள்ளனர். நிறுவனங்களை திறம்பட நடத்திச்செல்வதில் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது.மனிதர் ஒவ்வொருவரும் வெவ்வேறு குணம் கொண்டவராக உள்ளனர். குணத்தில் அடிப்படையில், மனிதர்களை 10 வண்ணங்களால் வகைப்படுத்தமுடியும்.ஒரு நிறுவனம், தங்கள் பணியாளர்களின் குணம், திறன் சார்ந்த பலம், பலவீனங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.

    அதனடிப்படையில் எந்த இடத்தில் யாரை அமர்த்தவேண்டும் என ஆராய்ந்து பொறுப்புகளை ஒப்படைக்கவேண்டும்.தவறான இடத்தில் பணி அமர்த்தினால் எத்தகைய திறன் மிக்கவர்களானாலும், அவர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால், நிறுவன பணிச் சூழலும், உற்பத்தியும் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×