என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூர், பல்லடத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது

- மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம்.
- காலை 11 மணிக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூர் மின்பகிர்மான வட்ட கூடுதல் தலைமை பொறியாளர், நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம். இந்த தக–வலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமையில் நடக்கிறது. இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது மின்சார இணைப்பில் வினியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை பல்லடம் செயற்பொறியாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.