search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தல்
    X

    புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மகேஸ்வரி, துணைத்தலைவர் ரத்னா மற்றும் உறுப்பினர்களுடன் துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர் திவாகரன் மற்றும் பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி உள்ளனர்.

    திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்தல்

    • பள்ளி மேலாண்மைக்குழு குறித்து பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
    • பள்ளி மேலாண்மைக்குழு வகுப்புகளாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகூட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பின்னர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் தேர்தல் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் தேர்தல் பார்வையாளராக கலந்துகொண்டு கண்காணித்தார். மாவட்ட வேளாண்துறை அதிகாரி ஈஸ்வரமூர்த்தி தேர்தல் பார்வையாளராக செயல்பட்டார்.

    பள்ளி மேலாண்மைக்குழு குறித்து பெற்றோர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1 முதல் 5-ம்வகுப்பு, 6 முதல் 8-ம் வகுப்பு, 9 முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 ஆகிய வகுப்புகளாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இதில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர்கள் தங்களை பற்றிய விபரங்களையும், குழுவில் உறுப்பினரானால் என்ன செய்வோம் என்பது குறித்தும் கூறினார்கள்.

    இதனையடுத்து நடந்த உறுப்பினர்கள் தேர்தலில் தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து உறுப்பினர்களாக சாயிதா பானு, பத்மபிரியா, முத்தமிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், சபியுல்லா, விமலா, சுதா, ஹேமலதா, தேன்மொழி, சாந்தி, மகேஸ்வரி, ரத்னா ஆகியோர் பெற்றோர் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் துணை மேயர் பாலசுப்ரமணியம், கவுன்சிலர் திவாகரன், ஆசிரியர் பிரதிநிதியாக ஆசிரியை சர்வேஸ்வரி, தன்னார்வ அமைப்பின் சார்பில் நீலவேணியும் மற்றும் மகளிர் சுய உதவிகுழு சார்பில் உறுப்பினராக கவிதா தேவி என 20 பேர்கள் கொண்ட குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து நடந்த தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் தலைவராக மகேஸ்வரியும், துணைத்தலைவராக ரத்னாவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் முதல் கூட்டம் நடந்தது. இதில் அரசு சார்பில் ஆசிரியர்கள் நியமிக்கும் வரை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலமும், பள்ளி மேலாண்மை குழு மூலமும் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான செயல்கள் முன்னெடுப்பது என முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த கூட்டம் வருகிற 15ந் தேதி ( வெள்ளிக்கிழமை ) நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பள்ளி மேலாண்மைக்குழுவின் முதல் நிகழ்ச்சியாக பள்ளி வளாகத்தில் தலைவர் மகேஸ்வரி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    Next Story
    ×