என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
தாராபுரத்தில் டிரைவர் தற்கொலை
- நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்துள்ளார்.
- அரச மரத்தில் மாலை 4 மணி அளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்:
தாராபுரம் வடதாரை காமராஜ்புரத்தை சேர்ந்தவர் தனசேகர்-சாந்தி. இவர்களது மகன் விஜய் (வயது 19) .இவர் மினி வேன் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்துள்ளார். பின்னர் தாராபுரம் ஜின்னா மைதானத்தை அடுத்த மாசாணி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள அரச மரத்தில் மாலை 4 மணி அளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு விைரந்து சென்றார். பின்னர் விஜய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜய் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






