என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் மகளிர் மையங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
    X

    மகளிர் மையங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்து காட்சி.

    பல்லடத்தில் மகளிர் மையங்கள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

    • ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு முகாம் வரும் 20 ந்தேதி நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க அறிவுறுத்தினார்.

    பல்லடம்,ஜூலை.12-

    குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வரும் 20 ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசு பள்ளிகளில் மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இதற்கிடையே பல்லடம் வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள இடங்களை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் நேரில் ஆய்வு செய்தார். சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள மையத்தில் இடவசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், சுகாதார வளாகம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்ரமணியம், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×