என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
இந்து மக்கள் கட்சி சார்பில் 6ந்தேதி ஆர்ப்பாட்டம்
- சந்திராயன் வெற்றியை சீமான் விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
- சனாதன ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து வரும் 6 ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பல்லடம்:
கோவையில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சந்திராயன் வெற்றி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படக்கூடியது. இதனை சீமான் விமர்சித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. திமுக அரசு இந்து விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்து மதத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளின் துவக்கம் தான் இந்த மாநாடு. இதற்குப் பின்புலமாக தேச விரோத சக்திகள் உள்ளன. எனவே இந்த மாநாட்டிற்கு அனுமதி அளித்தது இந்துக்களின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை தவிர வேறொன்றுமில்லை.
இதே போல இந்து மக்கள் கட்சி சார்பில் திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த முயன்ற போது ஏன் அனுமதி அளிக்கவில்லை. சனாதன ஒழிப்பு மாநாடு நடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து வரும் 6 ந்தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். திமுக தற்போது கிறிஸ்தவர்கள் முன்னேற்ற கழகமாக மாறி வருகிறது.அதன் வெளிப்பாடுகள் நன்றாகவே தெரிகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஏராளமான கோவில்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
எனவே இந்து சமய அறநிலையத்துறையும், அந்தந்த மாவட்ட நிர்வாகமும் இணைந்து கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 50ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, விநாயகர் ஊர்வலம் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






